» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 2-வது ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதியதில் கேட் பழுதடைந்து பூட்டிக்கொண்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை முதல் நடைமேடைக்குக் கொண்டு வருவதற்காக, இன்று மாலை 1-ஆம் கேட் மற்றும் 2-ஆம் கேட் ஆகியவை மூடப்பட்டன. அப்போது 2-வது ரயில்வே கேட்டில் ஒருபுறம் மூடிய நிலையில், மறுபுறம் கேட் மூடுவதற்கு முன்பாக வேகமாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ரயில்வே கேட் மீது மோதியது.
இந்த மோதலில் ரயில்வே கேட் பலத்த சேதமடைந்து, தானாகப் பூட்டிக்கொண்டது. இதனால் அந்தச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. நகரின் முக்கியச் சந்திப்பு என்பதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விரைந்து வந்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கடும் அவதி
தூத்துக்குடியில் ஒன்றாவது ரயில்வே கேட்டில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த ரயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாம் ரயில்வே கேட் இன்று மாலை ஆட்டோ மோதி பழுதானதால் அந்த கேட்டும் மூடப்பட்டது. இரண்டு கேட்டு களும் மூடப்பட்டதால் புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
மக்கள் கருத்து
tutyanApr 22, 2026 - 10:10:11 AM | Posted IP 104.2*****
ரயில்வே ஸ்டேஷனை மீள்விட்டானுக்கு மாற்றினால் தான் இதற்கு தீர்வு .. வியாபாரிகளால் தான் எல்லாம் நாசமாக போறது ..இதுல பயணிகள் நலச்சங்கம் வேற ஏதோ அவங்களாலதான் ரயில் ஓடுதுனு நினைப்பு .. இன்னைக்கு இருக்குற சாலை வசதிக்கு தூத்துக்குடி -மீளாவிட்டானுக்கு அதிகபட்சம் 20 நிமிஷத்துல போயிடலாம் .. இன்னும் சந்து பொந்து மாதிரி ஒன்னாம் கேட் ரெண்டாம் கேட் இப்படி 10 கேட் போடுவானுங்க போல ..
மனிதன்Apr 22, 2026 - 08:00:01 AM | Posted IP 162.1*****
ஆளும் கட்சி நினைத்து இருந்தால் பாலம் போட்டு இருக்கலாம், நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போன வரலாறு பேசும்
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)








BabuApr 23, 2026 - 06:52:24 PM | Posted IP 104.2*****