» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: காவலர் சஸ்பெண்ட் - எஸ்பி அதிரடி உத்தரவு!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:46:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் சபரி குமார் (33). இவர் கோவில்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சபரி குமார் தனது குடியிருப்பில் உள்ள மற்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

அரசுப் பணியில் இருந்துகொண்டு ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகக் காவலர் செயல்பட்டது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த எஸ்பி மதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை நிலை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலர் சபரி குமார் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதற்காக சபரி குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவலரே இத்தகைய செயலில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory