» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வீட்டின் அருகே ரூ.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அதிமுக கூட்டணிக் கட்சியான அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படைத்த தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸை வீட்டின் பின்புறம் வழியாக வெளியில் வீசினார்களாம்.
உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரூ.14 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேட்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)

திருமணமான 6 மாதங்களில் மாயமான புதுப்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:37:52 AM (IST)







