» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)
தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தொகுதியில் ரூ.800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக ரூ.136 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் வசதி. வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீரைச் சீரமைத்து, தற்போது தினசரி குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.பஞ்சாயத்துகளாக இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்குச் சாலை, தெருவிளக்கு மற்றும் பாதாளச் சாக்கடை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நியோ டைடல் பார்க், பர்னிச்சர் பார்க் மற்றும் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த முறை 'சூப்பர் ஸ்டார்' ஆக மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதாகக் கூறிய அவர், மீண்டும் வெற்றி பெற்றால் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார்:
- இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள்.
- மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்வு.
- மீனவர் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.12,000 ஆகவும், உப்பளத் தொழிலாளர் மழைக்கால நிவாரணம் ரூ.8,000 ஆகவும் உயர்வு.
- தூத்துக்குடியில் நவீன கிரிக்கெட் மைதானம் மற்றும் 4-வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்தல்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் நேரத்திற்காக மட்டும் வருபவர்கள் என்று விமர்சித்த அமைச்சர், "மழை, வெள்ளம் என எந்தக் காலத்திலும் மக்களுடன் களத்தில் நிற்பது நான்தான் என்பது தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சென்னையைச் சேர்ந்தவர், அவருக்கு உள்ளூர் பிரச்சினைகள் தெரியாது" என்று காரசாரமாகத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குழந்தையிலிருந்து முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் திட்டங்களை வழங்கியுள்ளதால், மக்கள் திமுக கூட்டணியை மீண்டும் அமோகமாக வெற்றி பெறச் செய்வார்கள் என்று அவர் உறுதியுடன் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)

திருமணமான 6 மாதங்களில் மாயமான புதுப்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:37:52 AM (IST)







