» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் நகை பறிப்பு: இரு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:32:40 AM (IST)
கயத்தாறு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற மர்ம நபர்களை, அந்தப் பெண் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ரெஜினா மேரி. இவர் கயத்தாறு பஜார் பகுதியில் நெட் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது சென்டரை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
கயத்தாறு-கழுகுமலை சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் அருகே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் ரெஜினா மேரி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திடீரென பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர், தனது சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டு திருடர்களுடன் மல்லுக்கட்டினார்.
சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஒரு திருடனின் தலைமுடியைப் பிடித்து ரெஜினா மேரி பலமாக இழுத்ததில், நிலைதடுமாறிய திருடர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர்.பெண்ணின் துணிச்சலான எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய அந்த மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினர். இருப்பினும், இந்த போராட்டத்தின் போது ரெஜினா மேரி அணிந்திருந்த சங்கிலி அறுந்து, சுமார் 2 பவுன் எடையுள்ள பாதி சங்கிலி திருடர்களின் கையில் சிக்கியது.
பாதி சங்கிலியுடன் தப்பிய மர்ம நபர்கள் குறித்து ரெஜினா மேரி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருடர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை வைத்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் கட்டுப்பாடுகளை மீறினால் 2 ஆண்டு சிறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:03:44 PM (IST)

முறைகேடு புகார்: தூத்துக்குடி மாநகராட்சியில் 3 டெண்டர்கள் மற்றும் பணி உத்தரவுகள் ரத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:49:52 PM (IST)

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)







