» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறு: ஸ்வீட் மாஸ்டர் விஷம் குடித்துத் தற்கொலை!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:58:40 AM (IST)
பசுவந்தனை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஸ்வீட் மாஸ்டர், மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் (46). இவருக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி முருகலட்சுமி (36). இவர்களுக்கு சுடலைவடிவு (15), உமா மகேஸ்வரி (11) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வள்ளிநாயகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
வள்ளிநாயகத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் குடிபோதையில் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் முருகலட்சுமி தனது மகள்களுடன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.
நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து ஊருக்குத் திரும்பிய வள்ளிநாயகம், குடிபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று தனது மனைவி மற்றும் மகள்களை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் வர மறுத்ததால் மிகுந்த மனவேதனை அடைந்த வள்ளிநாயகம், இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இன்று காலை 8 மணி அளவில் அவரது தாயார் சங்கரம்மாள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வள்ளிநாயகம் வீட்டின் முற்றத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துத் தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.
தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







