» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:52:21 AM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செல்லப்பாண்டியன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு 'இரட்டை இலை' சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

முன்னாள் அமைச்சரான செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டி நகர், நிகிலேசன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்திற்காக 17-வது வார்டுக்கு வருகை தந்த வேட்பாளருக்கு, அதிமுக வட்டச் செயலாளர் முருகன் தலைமையில் சிறப்பான மற்றும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், பொதுமக்கள் வேட்பாளருக்குப் பூரண கும்ப மரியாதை அளித்தும், சால்வை அணிவித்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory