» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் விழுந்த 3 புள்ளிமான்கள் உயிருடன் மீட்பு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:46:15 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூன்று புள்ளிமான்களைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கோடங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கெங்கராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. நேற்று காலை, அப்பகுதியில் இரை தேடி வந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க மூன்று புள்ளிமான்கள், எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக அந்த ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்தன.
கிணற்றில் இருந்த தண்ணீரில் அந்த மான்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட கிணற்றின் உரிமையாளர், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரால் மான்களை மீட்க முடியாத சூழல் நிலவியதால், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் புன்னைவனக்கட்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜா, முத்துக்குமார், பெரியசாமி, கொம்பு மகாராஜா மற்றும் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கினர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று மான்களையும் காயமின்றி லாவகமாகப் பிடித்து, கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட மான்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மான்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர், அவை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டன. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசித நடவடிக்கையைப் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







