» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணைக் கத்தியால் குத்தி நகையைப் பறித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:38:36 AM (IST)

ஏரல் அருகே பெண்ணைக் கத்தியால் குத்தி நகையைப் பறித்த வழக்கில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள குரங்கணி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியகலா (45). இவரது கணவர் கடந்த 2015-ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், சத்தியகலா தனியாக வசித்து வந்தார். இவருக்கும் குலையன்கரிசலைச் சேர்ந்த செல்வகணேசன் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, இருவரும் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவிட்டு குரங்கன்தட்டு விலக்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது செல்வகணேசன் திடீரென சத்தியகலாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்வகணேசன், சத்தியகலாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்ததோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றார்.

இந்தச் சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வகணேசனைக் கைது செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட சத்தியகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி பர்ஷாத் பேகம், செல்வகணேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை ₹5,000 அபராதம் விதித்து நேற்று (ஏப். 16) தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory