» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் : டி.டி.வி. தினகரன் பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:27:05 AM (IST)

"மக்கள் விரோத திமுகவை வீழ்த்த இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜை ஆதரித்து வல்லநாடு பகுதியில் டி.டி.வி. தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகம் போதைப்பொருட்களின் சந்தையாக மாறிவிட்டது. ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது.
இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும், செக்காரக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி மற்றும் கலைக் கல்லூரி அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் உடனடியாக மூடப்படும்.
ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம்: தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்துப் பிரசாரம் செய்த அவர்: "2021-ல் நாங்கள் பிரிந்து இருந்ததால் திமுக வெற்றி பெற்றது. இப்போது கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் விரோத திமுகவை வீழ்த்த இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும்," என தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 25,000 ஏக்கரில் நடைபெறும் வாழை சாகுபடியைக் கருத்தில் கொண்டு, வாழை சார்ந்த பிரத்யேக சந்தை அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்தப் பிரசாரத்தின் போது அதிமுக ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், அமமுக மாவட்ட நிர்வாகிகள் சங்கரலிங்கம், சிவராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







