» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக கவுன்சிலர் மீது தாக்குதல்: நகரச் செயலாளர் உட்பட இருவர் மீது வழக்கு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:21:51 AM (IST)
நாசரேத் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அதே கட்சியைச் சேர்ந்த நகரச் செயலாளர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (44). இவர் நாசரேத் பேரூராட்சியின் 12-ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், வார்டு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும், நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி ஸ்டார்லிங் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, ரவீந்திரன் தனது வீட்டின் முன் அதிமுக ஒன்றியச் செயலாளர் அங்கமங்கலம் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கிங்ஸ்லி ஸ்டார்லிங் மற்றும் பாலகணேசன் உள்ளிட்டோர் ரவீந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை ரவீந்திரன் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த பாலகணேசன் மற்றும் கிங்ஸ்லி ஸ்டார்லிங் ஆகியோர் ரவீந்திரனை அவதூறாகப் பேசித் தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ரவீந்திரன், உடனடியாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக ரவீந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி ஸ்டார்லிங் மற்றும் பாலகணேசன் ஆகிய இருவர் மீது நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் நாசரேத் பகுதி அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







