» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு : பூ மார்க்கெட், குடியிருப்புப் பகுதிகளில் ஆதரவு திரட்டல்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:10:56 PM (IST)



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன், இன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கீதா ஜீவன் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பூபாலராயர்புரம், வெற்றிவேல் புரம், சாமுவேல் புரம் (கிழக்கு & மேற்கு), எஸ்.எஸ். மாணிக்கபுரம் உள்ளிட்ட தெருக்களுக்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். வரும் தேர்தலில் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்துத் தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது பகுதி செயலாளர்கள் நிர்மல் ராஜ், ஜெயக்குமார், வட்டச் செயலாளர் கருப்பசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர் ஜெபஸ்டின் சுதா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் தூத்துக்குடி நகரின் முக்கியப் பகுதியான பூ மார்க்கெட் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பூ வியாபாரிகள், சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வியாபாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், அவை உரிய முறையில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory