» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)



மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டநகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் மத்திய அரசின் ‘தொகுதி மறுவரையறை’நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியில் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்குச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமை தாங்கினார். இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டநகலை அவர்கள் தீயிட்டு எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த "கருப்புச் சட்டத்தை" திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory