» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

"நாகர்கோவிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும், ஊழலையும் தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது," எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாகர்கோவிலில் பிரம்மாண்ட சாலைப் பேரணி நடத்தினார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த அவர், வேப்பமூடு முதல் வடசேரி வரை சுமார் 1.5 கி.மீ. தூரம் திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்தப் பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணிக்குப் பிறகு தனது 'எக்ஸ்' (X) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி: "நாகர்கோவில் சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும். மாற்றத்தை விரும்பும் மக்கள் எழுச்சி இங்கே பிரதிபலிக்கிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)








Bala அவர்களுக்குApr 16, 2026 - 09:31:24 PM | Posted IP 162.1*****