» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர் வேலைக்குச் சென்ற இடத்தில் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரது மகன் கணேஷ் முருகன் (25). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற கணேஷ் முருகன், பணி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரது தாயார் உத்தண்டக்கனி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கணேஷ் முருகன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று இரவு தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.
முதற்கட்ட விசாரணையில், கணேஷ் முருகன் பணி முடிந்த பிறகு தனது ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எந்தத் திசையில் சென்றார் என்பதைத் கண்டறிய, அனல் மின் நிலைய நுழைவு வாயில் மற்றும் அந்தச் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்: இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சனி 11, ஏப்ரல் 2026 12:00:57 PM (IST)







