» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)



மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன், தொகுதியின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டித் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான இவர், இன்று விருசம்பட்டி, வேடபட்டி, மாமு நைனாபுரம், நெடுங்குளம், துவரந்தை, ஈ.வேலாயுதபுரம் மற்றும் பல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் அவருக்குக் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பல்லாகுளம் கிராம மக்களிடையே பேசிய மார்க்கண்டேயன் கூறியதாவது: "கொல்லன் பட்டறையில் குண்டூசியைத் தேட வேண்டிய அவசியமில்லை என்பது போல, உங்களிடம் நான் புதிதாக வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பல்லாகுளம் கிராம மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை நான் ஏற்கெனவே கொண்டு வந்துள்ளேன். இந்த நான்கு ஆண்டுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், உங்களில் ஒருவனாகவும் எப்போதும் உடனிருந்து பணியாற்றி வருகிறேன். 

நான் செய்த மக்கள் பணிகளை அங்கீகரித்து, மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அக்கிராமங்களுக்குச் செய்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைக் குறிப்பிட்டு, மக்களிடம் அவர் ஆதரவு கோரினார்.

இந்த பிரச்சாரப் பயணத்தில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்பு ராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சடையாண்டி, ஒன்றியச் செயலாளர் சபாபதி, திமுக நிர்வாகி பாண்டியராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory