» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, தொகுதியின் முதல் வாக்குச்சாவடி அமைந்துள்ள கிராமத்திலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று உற்சாகமாகத் தொடங்கினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் சத்யா, விளாத்திகுளம் தொகுதியின் முதல் வாக்குச்சாவடியான அயன்கரிசல்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தனது முதற்கட்டப் பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்தார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சத்யா பேசியதாவது: "நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் சகோதரியாக என்றும் உங்களுடனேயே இருப்பேன். எங்களது குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுக பேரியக்கத்திற்காக விசுவாசத்துடன் பணியாற்றி வருகிறது. நான் எப்போதும் உங்களுக்காக விளாத்திகுளத்திலேயே இருப்பேன்; நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து செவிசாய்ப்பேன். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்."

அயன்கரிசல்குளம் தொடங்கி அழகாபுரி, வெம்பூர், மாவில்பட்டி, மெட்டில்பட்டி, பெருமாள் கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் அவர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடமெல்லாம் அவருக்குக் கட்சியினரும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த எழுச்சியான பிரச்சார நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனவதி (புதூர் மேற்கு), தனஞ்செயன் (புதூர் கிழக்கு), மகேஷ் (விளாத்திகுளம் மேற்கு), ராமச்சந்திரன் (தெற்கு), பால்ராஜ் (கிழக்கு) மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மோகன், சிறுபான்மை பிரிவு சதீஷ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணா கிருஷ்ணன், கந்தசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory