» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்த போதிலும், பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றதால் சில மணி நேரங்களிலேயே மீன்கள் விற்றுத் தீர்ந்தன.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். ஆனால், கடலில் நீரோட்ட மாற்றம் அல்லது பிற காரணங்களால் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடனேயே கரை திரும்பினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அதிகாலையிலேயே திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காகப் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர். வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது. சீலா ஒரு கிலோ ரூ.1,000, விளைமீன், ஊழி, பாறை ஒரு கிலோ ரூ.400 முதல் 500 வரை, நண்டு ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை, கேரை மற்றும் சூரை ஒரு கிலோ ரூ.250 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ.2,000 வரை விற்பனையானது.
விலை அதிகமாக இருந்தபோதிலும், தங்களுக்குப் பிடித்தமான மீன்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். வியாபாரிகளும் போட்டி போட்டு ஏலம் எடுத்ததால், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் ஒரு சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன. மீன் வரத்து குறைந்ததால் தங்களுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







