» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கொடை விழா: அதிமுக வேட்பாளர் சாமி தரிசனம்
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:55 PM (IST)

தூத்துக்குடி மேலூர் தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனி கொடை விழாவில், அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மேலூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனி கொடை விழா, கடந்த 24-ஆம் தேதி கால்நடுதல் நிகழ்வுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கணபதி ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், அம்பாளுக்கு 'அன்னப்படை' படைக்கப்பட்டு, பக்தர்களுக்குக் 'கஞ்சி வார்த்தல்' நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி மாநகர அதிமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் பாலாஜி, மாவட்டத் துணைத் தலைவர் மகாராஜன், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவா பாண்டியன், விக்னேஷ் பாண்டியன், முத்துராஜ், கே.கே.பி. விஜயன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)

ஏப்ரல் 1: உலக முட்டாள்கள்? அறிவாளர்கள் தினம் வரலாறு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:51 PM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: ரூ.55.55 லட்சம் விடுவிப்பு
செவ்வாய் 31, மார்ச் 2026 4:59:12 PM (IST)

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST)







