» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: ரூ.55.55 லட்சம் விடுவிப்பு

செவ்வாய் 31, மார்ச் 2026 4:59:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல்  பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 59.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வரும் தீவிர சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 59 லட்சத்து 73ஆயிரத்து 3ஆயிரத்து 810 ராெக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 2,95,392 மதிப்புள்ள மதுபானங்கள், ரூ. 6,62,600 மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில், ரூ. 55,55,970 ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் ரூ. 50,000-க்கும் அதிகமான ரொக்கத்தைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory