» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சி.த. செல்லப்பாண்டியன் போட்டி: ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி சண்முகநாதன்..!

வெள்ளி 27, மார்ச் 2026 3:14:38 PM (IST)



அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள அதிமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக நேரடியாகப் போட்டியிடும் 3 முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்பி சண்முகநாதன் மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் ஆர். சத்யா ஆகியோர் களம் காண்கின்றனர். 

தூத்துக்குடி வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் - சுய விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான சி.த.செல்லப்பாண்டியன் குறித்த வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்ட விவரங்கள்:

• பெயர்: சி.த.செல்லப்பாண்டியன் M.A

• பெற்றோர்: சி.தங்கராஜ் நாடார் (விவசாயம்)

• பிறந்த தேதி: 14.01.1957

• மனைவி: சி.த.செ.இந்திரா

• குடும்பம்: இவருக்கு STC.ராஜாசிங், STC.ஜெபசிங் ஆகிய இரு மகன்களும், J.எஸ்தர் தங்கமணி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரது மருமகன் பெயர் ஜெயக்குமார் மர்காசிஸ் ஆகும்.

அரசியல் பயணம்: சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் 2001-ம் ஆண்டு தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தபோது அங்கிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்:

• தொழிற்சங்கப் பணிகள்: 2006-ல் தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவராகவும், 2008-ல் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2011-ல் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

• சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்: 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

• கட்சிப் பொறுப்புகள்: 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளராகப் பதவி வகித்தார். 2017-ல் கழக அமைப்புச் செயலாளராகவும், 2024-ல் கழக வர்த்தக அணிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

• இதர பொறுப்புகள்: 2016-ல் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகப் பணியாற்றினார். 2020-ம் ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழுத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட போதிலும், அத்தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி. சண்முகநாதன் வேட்பாளர் சுயவிவரம்:

பெயர்: எஸ்.பி. சண்முகநாதன்

வயது: 66

சொந்த ஊர்: பண்டாரவிளை (ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்டது).

பின்னணி: பாரம்பரிய வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசியலுக்கு வரும் முன் தனது தந்தையுடன் இணைந்து சித்த வைத்தியத் தொழிலைச் செய்து வந்தார்.

அரசியல் பயணம் (1975 - தற்போது வரை):

தொடக்க காலம்: 1975-இல் அதிமுக உறுப்பினராக இணைந்தார். 1977-இல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் பண்டாரவிளை கிளைச் செயலாளராக நியமிக்கப்பட்டு தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.

உள்ளாட்சிப் பதவி: 1986-ஆம் ஆண்டு பெருங்குளம் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிப் பதவிகள்: * 1995 & 1999: ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலாளர்.

2000-இல் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்.

சட்டமன்றத் தேர்தல் மற்றும் அமைச்சர் பதவிகள்:

எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் பலமுறை அமைச்சர் பதவிகளையும், கட்சிப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்:

2001 தேர்தல்: முதன்முறையாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். கைத்தறித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2011 தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார்.

2013: மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

2016 தேர்தல்: மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

அரசியல் சிறப்பு அம்சங்கள்:

43 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பலமுறை பதவிகள் பறிக்கப்பட்ட போதும், உட்கட்சிப் பூசல்களைத் தாண்டி அதிமுகவின் ஒரு தீவிர விசுவாசியாக நிலைத்து நின்றுள்ளார்.

2009-இல் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவிற்குச் சென்றபோது, பலவீனமாக இருந்த மாவட்ட அதிமுகவை மீண்டும் கட்டமைக்க மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு திறம்படச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் கிளைச் செயலாளராகத் தொடங்கி, இன்று வரை கட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் இவருக்கு, மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

VeerabuthiranMar 27, 2026 - 03:30:15 PM | Posted IP 162.1*****

Super. Winning Loading for NDA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory