» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முதியோர் இல்லத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!
வெள்ளி 27, மார்ச் 2026 5:01:14 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி 'லிட்டில் சிஸ்டர்ஸ்' முதியோர் இல்லத்தில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள 'லிட்டில் சிஸ்டர்ஸ்' முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலரும், உதவி ஆட்சியருமான (பயிற்சி) தி. புவனேஷ் ராம், முன்னிலை வகித்தார்.
85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நடக்க முடியாத நிலையில் உள்ள முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக, 12D விண்ணப்பப் படிவங்களை மாவட்ட வருவாய் அலுவலர் முதியோர்களிடம் வழங்கினார்.
ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நடனம், நாடகம் மற்றும் பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். அங்கன்வாடி பணியாளர்கள் இல்லத்தின் முன்பாக வண்ணமயமான தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை வரைந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மூத்த குடிமக்கள் பேசுகையில், "நாங்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்; அதேபோல் பொதுமக்களாகிய நீங்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறக்கூடாது" என நெகிழ்ச்சியுடன் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காயத்திரி, நகர்ப்புற திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகற்றப்படாத வி.சி.க. சுவர் விளம்பரம்: தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:47:54 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பாதுகாப்பு ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:36:26 PM (IST)

தூத்துக்குடியில் உடைந்த கால்வாய் மூடிகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 5:55:33 PM (IST)

பிரதான குழாய் வால்வு உடைந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 5:46:21 PM (IST)

தூத்துக்குடியில் வணிக எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!
வெள்ளி 27, மார்ச் 2026 5:36:48 PM (IST)

பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை : தூத்துக்குடி எஸ்பியிடம் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 4:21:08 PM (IST)








