» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை : தூத்துக்குடி எஸ்பியிடம் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 4:21:08 PM (IST)

பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் டி.வி.ஏ. பிரைட்டர் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.
அதில், பெண்களைப் பற்றி இணையதளத்தில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்த பொன்ராஜ் வெள்ளைச்சாமி என்பவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்தநிகழ்வின் போது தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மகளிர் அணி இணை அமைப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகற்றப்படாத வி.சி.க. சுவர் விளம்பரம்: தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:47:54 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பாதுகாப்பு ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:36:26 PM (IST)

தூத்துக்குடியில் உடைந்த கால்வாய் மூடிகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 5:55:33 PM (IST)

பிரதான குழாய் வால்வு உடைந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 5:46:21 PM (IST)

தூத்துக்குடியில் வணிக எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!
வெள்ளி 27, மார்ச் 2026 5:36:48 PM (IST)

தூத்துக்குடி முதியோர் இல்லத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!
வெள்ளி 27, மார்ச் 2026 5:01:14 PM (IST)








