» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்: ரூ.23¾ லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்

புதன் 25, மார்ச் 2026 4:26:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்  க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (25.03.2026) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்:

மொத்த ரொக்கப் பணம்: உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை – ரூ.45,98,055/-

இலவசப் பொருட்கள்: கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு – ரூ.5,18,540/-

மதுபானங்கள்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு – ரூ.1,79,911/-

போதைப் பொருட்கள்: பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு – ரூ.5,75,500/-

விடுவிக்கப்பட்ட தொகை: பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட ரொக்கத் தொகை – ரூ.23,70,080/-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory