» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:51:03 PM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சாம் டேவிட் (21) என்பவர், வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்ததாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும், இளைஞர்களைச் சீரழிக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சாம் டேவிட் மீது, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், சாம் டேவிட்டை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, வடபாகம் காவல் நிலைய போலீசார் இன்று சாம் டேவிட்டை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, மார்ச் 2026 9:01:51 PM (IST)

காற்றாலையில் வேலை பார்த்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:56:10 PM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளியை விரைந்து கைது செய்த 116 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
புதன் 25, மார்ச் 2026 8:24:02 PM (IST)

அமைச்சர் கீதா ஜீவன் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:17:02 PM (IST)

பைக் மீது லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!
புதன் 25, மார்ச் 2026 8:08:41 PM (IST)

ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா
புதன் 25, மார்ச் 2026 8:01:59 PM (IST)








