» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்: வாலிபர் கைது - சமூக வலைதள பக்கம் முடக்கம்!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:05:17 PM (IST)
தூத்துக்குடியில், சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகர் தாய் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் கார்த்திக் (20). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தியைக் காட்டி மிரட்டுவது போன்றும், மோதலைத் தூண்டும் வகையிலும் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் உடனடியாக நீக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி காவல்துறை எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, மார்ச் 2026 9:01:51 PM (IST)

காற்றாலையில் வேலை பார்த்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:56:10 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:51:03 PM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளியை விரைந்து கைது செய்த 116 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
புதன் 25, மார்ச் 2026 8:24:02 PM (IST)

அமைச்சர் கீதா ஜீவன் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:17:02 PM (IST)

பைக் மீது லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!
புதன் 25, மார்ச் 2026 8:08:41 PM (IST)








