» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எஸ்.ஐ மீது அம்மிக் கல் வீச்சு : கொலை முயற்சி வழக்கில் வாலிபர் கைது!

செவ்வாய் 24, மார்ச் 2026 3:33:50 PM (IST)

தூத்துக்குடியில் விசாரணைக்காகச் சென்ற எஸ்.ஐ மீது அம்மிக் கல்லை வீசி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய அவரது தாய் மற்றும் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவரின் மகன் பெர்னிக் (24). இவர் மீது அவரது அண்ணி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி பிலிப் (32) விசாரணை நடத்தி வந்தார்.

நேற்று மாலை பெர்னிக் வீட்டில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, எஸ்.ஐ அந்தோணி பிலிப் தனது சொந்தக் காரில் அங்கு சென்றார். அப்போது, வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பெர்னிக், திடீரென ஒரு அம்மிக் கல்லை எஸ்.ஐ-யின் கார் மீது பலமாக வீசினார்.

அந்த அம்மிக் கல் காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது. சமயோசிதமாக எஸ்.ஐ காரை நிறுத்திவிட்டு விரைவாகக் கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனைத் தொடர்ந்து, தப்பியோட முயன்ற பெர்னிக்கை எஸ்.ஐ அந்தோணி பிலிப் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். அப்போது பெர்னிக்கின் தம்பி சஞ்சு (20) மற்றும் தாய் பாக்கியலட்சுமி ஆகியோர் எஸ்.ஐ-யை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

கைது செய்யப்பட்ட பெர்னிக் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள அவரது தாய் மற்றும் தம்பியை வடபாகம் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory