» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

செவ்வாய் 24, மார்ச் 2026 10:33:18 AM (IST)


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஒரே நாளில் பலரும் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் தனித்தனி கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்த மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொள்ளையன் கைது

இந்நிலையில், மருத்துவமனையில் செல்போன் திருடியது தொடர்பாக ஓட்டப்பிடாரம் தெற்கு ஆவரைகுளம் மாடசாமி மகன் பாபுராஜ் 36 என்பரை தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து, திருடப்பட்ட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். 

இதன் மூலம் இந்தத் திருட்டுச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொள்ளையன் மருத்துவமனைக்குள் சாவகாசமாக சென்று மருத்துவமனை ஊழியரின் செல்போனை திருடிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்கள் கோரிக்கை

செல்போன் திருட்டுகள் நள்ளிரவில் மட்டுமன்றி, பட்டப்பகலிலேயே மிகவும் துணிகரமாக அரங்கேறி வருகின்றன. இதனால் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காவல்துறையும் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மருத்துவமனை போன்ற பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory