» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நள்ளிரவில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் : பொதுமக்கள் கடும் அவதி
திங்கள் 23, மார்ச் 2026 11:23:09 AM (IST)

தூத்துக்குடியில் நள்ளிரவில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் அதிகளவில் புகை வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக நகரின் மேற்கு பகுதிகளான கோரம்பள்ளம், இபி காலனி, மாதவன் நகர், மடத்தூர், சோரீஸ்புரம், பி அன் டி காலனி, திரவிய ரத்ன நகர், கதிர்வேல் நகர், அசோக் நகர், பாக்கியலட்சுமி நகர், பால்பாண்டி நகர், மில்லர்புரம், அண்ணா நகர், டிஎம்பி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் தினறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. தொடர்ந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
ராஜாMar 23, 2026 - 01:25:02 PM | Posted IP 172.7*****
விவி டிட்டானியம் தான் அட்டூழியம்
ஏரியா காரன்Mar 23, 2026 - 01:15:22 PM | Posted IP 162.1*****
எந்த தொழிற்சாலை ? பெயர்களை வெளியிடுங்கள்
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, மார்ச் 2026 9:01:51 PM (IST)

காற்றாலையில் வேலை பார்த்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:56:10 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:51:03 PM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளியை விரைந்து கைது செய்த 116 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
புதன் 25, மார்ச் 2026 8:24:02 PM (IST)

அமைச்சர் கீதா ஜீவன் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:17:02 PM (IST)

பைக் மீது லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!
புதன் 25, மார்ச் 2026 8:08:41 PM (IST)









சங்கரன்Mar 23, 2026 - 10:16:16 PM | Posted IP 162.1*****