» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பித்து வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மருத்துவர் இரா.சுகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC Card) வைத்துள்ள அனைத்து வாக்காளர்களும், வாக்குச்சாவடியில் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அந்த அட்டையை அளிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்கண்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்:
- ஆதார் அட்டை (Aadhaar Card)
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி அட்டை (MGNREGA Job Card)
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்
- தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை
- ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card)
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் (NPR) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
- இந்தியக் கடவுச்சீட்டு (Indian Passport)
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை
- நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID Card)
வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு:
வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். இன்னும் பெயர் சேர்க்காத தகுதியுள்ள நபர்கள், படிவம் 6-ஐப் பயன்படுத்திப் பெயர் சேர்க்க உடனடியாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 21ம் தேதி ரமலான் பண்டிகை : அரசு காஜி கூட்டமைப்பு அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 8:25:15 PM (IST)

மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? தூத்துக்குடி எஸ்பி மதன் பேட்டி!
வியாழன் 19, மார்ச் 2026 7:59:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : கண்காணிப்புப் பணி தீவிரம்!
வியாழன் 19, மார்ச் 2026 4:12:25 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா
வியாழன் 19, மார்ச் 2026 3:14:59 PM (IST)

மாணவி கொலை வழக்கு: டிஎன்ஏ சோதனையில் சிக்கிய குற்றவாளி - ரகசிய இடத்தில் விசாரணை
வியாழன் 19, மார்ச் 2026 12:28:00 PM (IST)

தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
வியாழன் 19, மார்ச் 2026 11:42:00 AM (IST)








