» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!

வியாழன் 19, மார்ச் 2026 10:26:48 AM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோரிடம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு,முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என். நேரு, தலைமைக் கழகச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர் விருப்ப மனு அளித்தவர்களிடம் கலந்துரையாடினர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினர் மேயர் ஜெகன் பொியசாமி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மற்றும் ஆா்தா் மச்சாது உள்ளிட்ட 4பேர் நோ்காணலில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

IndianMar 19, 2026 - 03:18:01 PM | Posted IP 172.7*****

Jegan has done all lot of ground work, though I differ with his political idealogy.

THAMILANMar 19, 2026 - 11:26:03 AM | Posted IP 162.1*****

திரு ஜெகன் அவர்களுக்கு சீட் கொடுக்கலாம் ஏனென்றால் தூத்துக்குடியில் நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். மாநகரம் முழுவதும் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது நிறைய சாலைகள் பூங்கா மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள நிறைய இடங்களை மீட்டு இருக்கிறார். சட்ட மன்ற உறுப்பினராக வந்தால் சிறப்பாக செயல்படுவர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory