» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தாலங்குறிச்சி ஆர்.சி. பள்ளிக்கு புதிய கட்டிடம்: ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

வெள்ளி 13, மார்ச் 2026 3:21:12 PM (IST)



முத்தாலங்குறிச்சி புனித வளன் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நாட்டார்குளம் ஆர்.சி. பங்கிற்கு உட்பட்ட முத்தாலங்குறிச்சி புனித வளன் ஆர்.சி. தொடக்கப்பள்ளி மிகவும் பழமையானது. போதிய கட்டிட வசதிகள் இன்றி இயங்கி வந்த இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நெல்லையில் நடைபெற்ற தமிழக அரசின் "உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்" முகாமில், தற்போதைய எம்.பி-யும், தி.மு.க. மாநில செய்தித் தொடர்பாளருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மூலம் இதற்கான மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கையைத் தொடர்ந்து, இயற்கை இடர்பாடுகள் மறுகட்டமைப்பு மற்றும் புனரமைப்புத் திட்டம் (2025-26)-ன் கீழ், ரூ.37.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிய பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நாட்டார்குளம் பங்குத்தந்தை மார்டின் குமார் தலைமை தாங்கினார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து புதிய கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுடலை, ஆறுமுக நயினார், பொறியாளர்கள் மாரியப்பன், முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியை பானுமதி, அட்மா குமார், தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் இசக்கி பாண்டியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஊர் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory