» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

வேடநத்தம் சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது: இளம் பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டது மிகக் கொடுமையான ஒரு சம்பவம். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது; அதன் முழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஒரு ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பிக்கள், 6 ஆய்வாளர்கள் மற்றும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
உணவகங்கள் மற்றும் விடுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், மாணவர்கள் விடுதிகளில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் சூழல் நிலவுகிறது. வீடுகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறினாலும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது சிலிண்டர் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய போர்ச் சூழலில் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்தக் குழப்பங்களுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார். மேலும், "திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, "தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. முறைப்படி அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் அறிக்கை குறித்துத் தெரிவிக்கப்படும்," என்று பதிலளித்தார். பின்னர் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
வெள்ளி 13, மார்ச் 2026 5:33:01 PM (IST)

கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி? 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் களம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:08:08 PM (IST)

உடன்குடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:31:44 PM (IST)

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)

முத்தாலங்குறிச்சி ஆர்.சி. பள்ளிக்கு புதிய கட்டிடம்: ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:21:12 PM (IST)

வேடநத்தம் சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை : அமைச்சர் கீதா ஜீவன் உறுதிமொழி!
வெள்ளி 13, மார்ச் 2026 11:01:35 AM (IST)







