» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வியாபாரிகள் சங்க நிர்வாகி மீது தாக்குதல் : தந்தை - மகன் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 10:56:00 AM (IST)
சாத்தான்குளம் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகியை தாக்கியதாக தந்தை- மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம், இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் பேய்க்குளம் வியாபாரிகள் சங்க நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருவதோடு, அப்பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது அண்ணன் கணேசன் மற்றும் அவரது மகன் ராஜ்குமரன் ஆகியோர், மாரிமுத்துவின் வீட்டிற்குச் சென்று சொத்தை எழுதித் தருமாறு மிரட்டியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியதோடு, மாரிமுத்துவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி பூச்செண்டு அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் ரூ.3.22 கோடி திட்டப்பணிகள் : கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:23:59 PM (IST)

மாணவி கொலை: ஆறுதல் கூற வந்த ஆதவ் அர்ஜுனா - கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 8:14:06 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
வெள்ளி 13, மார்ச் 2026 5:33:01 PM (IST)

கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி? 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் களம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:08:08 PM (IST)

உடன்குடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:31:44 PM (IST)

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)







