» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சைபர் மோசடியில் இழந்த ரூ.53.75 லட்சம் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்பி நேரில் ஒப்படைப்பு

புதன் 11, மார்ச் 2026 5:23:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட ரூ.53,75,896 பணத்தை மீட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார், அதனை உரிய உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைத்தனர்.

ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம், போலி அரசு வேலை வாய்ப்பு மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற பல்வேறு சைபர் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழந்த 20 பேர், தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் (NCRP) புகார் பதிவு செய்திருந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில்:

மோசடிக்குத் தொடர்புடைய வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு உடனடியாக முடக்கப்பட்டன. சட்ட ரீதியான நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட 20 பேரின் வங்கி கணக்குகளிலிருந்து திருடப்பட்ட மொத்தம் ₹53,75,896 பணம் முழுமையாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், இன்று அலுவலகத்தில் வைத்துப் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரில் ஒப்படைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory