» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் : அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
புதன் 11, மார்ச் 2026 3:21:40 PM (IST)

தூத்துக்குடி மாப்பிளையூரணி வ.உ.சி நகரில் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.64.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 528 தொகுப்பு வீடுகளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி வ.உ.சி நகரில் ரூ.64.17 கோடி மதிப்பீட்டில் 528 புதிய தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து, பயனாளிகளிடம் வீடுகளுக்கான சாவி மற்றும் ஆணைகளை வழங்கினார்.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, வாரியச் செயற்பொறியாளர் மாடசாமி, உதவி பொறியாளர் மணிகண்டன், ஒன்றிய கழகச் செயலாளர் சரவணகுமார் மற்றும் முருகன், பொன்பாண்டி ரவி, வசந்தகுமாரி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

சைபர் மோசடியில் இழந்த ரூ.53.75 லட்சம் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்பி நேரில் ஒப்படைப்பு
புதன் 11, மார்ச் 2026 5:23:22 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 15-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வு – 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு!
புதன் 11, மார்ச் 2026 4:03:10 PM (IST)

இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் : உலமாக்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு
புதன் 11, மார்ச் 2026 3:41:48 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
புதன் 11, மார்ச் 2026 3:24:29 PM (IST)








