» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துணை முதல்வர் முன்னிலையிலேயே ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர்!

சனி 7, மார்ச் 2026 4:00:56 PM (IST)



தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களுக்கு இடையே ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வறுமையில் வாடிய ஜே.கே. ஜஸ்டின் என்ற இளைஞருக்கு, அவரது வாழ்வாதாரத்திற்காக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ். ஜோயல் முயற்சியால் "உதயநிதி ஃபிரெஷ் ஜூஸ் கார்னர்" என்ற கடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது அந்தக் கடையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து, ஜஸ்டின் சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

ஜஸ்டின் தனது உழைப்பில் சேமித்த பணத்தைக் கொண்டு ஏற்பாடு செய்திருந்த 7 தையல் இயந்திரங்களை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கரங்களால் ஏழை மக்களுக்கு வழங்கினார். ஜஸ்டினின் கடைக்குத் துணை முதலமைச்சர் வருகை தருவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னதாக ஜஸ்டின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகளையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பி. கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ். ஜோயல், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமக்கு உதவியவர் முன்னிலையிலேயே, தன்னால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்த ஜஸ்டினின் செயல் அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory