» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:25:37 AM (IST)
தூத்துக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (65). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் பயின்று வரும் 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரபாகர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









