» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:01:36 AM (IST)
கோவில்பட்டி அருகே கடலையூரில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (52). இவரது தந்தை காசி. சென்னையில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மாடசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினார்.
நேற்று மாடசாமியும், அதே ஊரைச் சேர்ந்த சின்னதம்பி (48) என்பவரும் அங்குள்ள நீராவி தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி குளத்திற்குள் விழுந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்திலிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு சின்னதம்பியை மீட்டனர். ஆனால், மாடசாமி குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேரம் போராடி மாடசாமியைச் சடலமாக மீட்டனர். நாலாட்டின்புதூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப மரணம்: தூத்துக்குடியில் சோகம்!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 7:27:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் : நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:34:37 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயரிடம் ஆசி!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:23:31 PM (IST)

அன்னை ஜூவல்லர்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:00:58 PM (IST)
_1771168864.jpg)
தூத்துக்குடியில் சினிமா பாணியில் 8 கி.மீ விரட்டிச் சென்று கொள்ளையர்களைப் பிடித்த டி.எஸ்.பி!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 10:56:15 AM (IST)

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:25:37 AM (IST)










