» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன்: தமிழக அரசு மீது பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு!

ஞாயிறு 15, பிப்ரவரி 2026 8:55:48 AM (IST)

தமிழக அரசின் தலையீட்டால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாகத் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சந்தியூர் ராசா பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பொதுச்செயலாளர் சந்தியூர் ராசா பார்த்திபன் கூறியதாவது: 

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களும், சத்துணவு ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு அவற்றைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கிறது. அதேசமயம், தேர்தல் நேரத்தை முன்னிட்டு மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு ஐந்து முறை உச்சநீதிமன்றத்தில் தலையிட்டு அதற்குத் தடை வாங்கியது. அரசின் இத்தகைய போக்கால்தான் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory