» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மக்களுக்கு முழுமையாக பயன்பட வேண்டும்: பாஜக

புதன் 14, ஜனவரி 2026 11:10:53 AM (IST)

தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொதுமக்களுக்கு முழுமையாக பயன்பட வேண்டும் என்று பாஜக மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிரம் (PMJVK) திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.136.35 கோடி மதிப்பில், 637 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்க பட்ட நிலையில் இந்த மருத்துவமனை அனைத்து தரப்பினருக்கும் முழுமையாக பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைக்கு மட்டும் ஒதுக்கப்படாமல், இதய நோய், நரம்பியல், சிறுநீரக, விபத்து, புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் வழங்கும் மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை மிக அவசியமானதாக இருப்பதால், மத்திய அரசு வழங்கிய நிதியில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை மக்கள் நலனுக்காக முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை வலியுறுத்தும் வகையில்,ஜனவரி 20ஆம் தேதி மாலை 4 மணிக்கு, தூத்துக்குடி VVD சிக்னல் அருகில்பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory