» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் கைது - கார் பறிமுதல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 6:21:45 PM (IST)
நாசரேத் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 275 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் இன்று (04.12.2025) வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் சாத்தான்குளம் தெர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (27) என்பதும் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்நது.
உடனடியாக போலீசார் பச்சைமால் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மொத்தம் 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









