» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் : திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:10:11 AM (IST)

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் நேற்று முன்தினம் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நேற்று பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் பவுர்ணமி கிரிவலம் கோவில் முன்பிருந்து தொடங்கியது. இதை கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! என்ற கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். இரவு 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









