» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆர்ஆர் பிரியாணி கடை திறப்பு விழா : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:53:45 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் புதிதாக சேலம் ஆர்ஆர் பிரியாணி கடையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி என்பது பல கிளைகளுடன் பிரியாணி மற்றும் சீன உணவுகளை வழங்கும் ஒரு பிரபல உணவகமாகும். சேலத்தில் தள்ளுவண்டி கடையில் தொடங்கி இன்று உலகளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த உணவகம் மட்டன் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசமாக வழங்குவது, பக்கெட் பிரியாணிக்கு இலவச முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி தமிழ்ச் சாலையில் ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் புதிதாக சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. ஆர்ஆர் பிரியாணி கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திமுக நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், டாக்டர் மகிழ்ஜான் ஜீவன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)










ஆண்ட பரம்பரைDec 4, 2025 - 05:19:20 PM | Posted IP 104.2*****