» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு : லாரி டிரைவர் கைது!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:38:58 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3½ பவுன் நகை திருடிய வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சண்முக வடிவு (40) இவர் துறைமுக மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29ஆம் தேதி காலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகை திருடுபோயிருந்தது. இதன் மதிப்பு ரூபாய் 1லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து முத்துச்செல்வி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் நகையை திருடியது தூத்துக்குடி டிஎம்பி காலனி 3வது தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சிவபாலன் (34) என்று தெரியவந்தது. இவர் லாரி டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து சிவபாலனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க நகையை மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









