» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!

வியாழன் 4, டிசம்பர் 2025 11:01:52 AM (IST)



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகளை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 புதிய மகளிர் விடியல் பேருந்துகள் துவக்க விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஏ.ஆர். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் கோட்டமேலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். 

புதிய பேருந்துகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிளை மேலாளர்கள் ஜேக்கப். ரமேஷ் பாபு, போக்குவரத்து கழகதொழிற்சங்க பொதுச் செயலாளர் தர்மன், பொருளாளர் முருகன் நிர்வாகிகள் கருப்பசாமி, மகாவிஷ்ணு லிங்கசாமி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய வழித்தடம் & பேருந்துகள் விபரம் 
  • தூத்துக்குடி - சுப்பிரமணியபுரம் (வழி: கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம், சாயர்புரம்)
  • தூத்துக்குடி - கீழவைப்பார் (வழி: அமெரிக்கன் மருத்துவமனை, தாமஸ்புரம், தருவைகுளம், பட்டிணமருதூர், வேப்பலோடை, கல்லூர்)
  • தூத்துக்குடி - பெருங்குளம் (வழி: கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, செபத்தையாபுரம், சாயர்புரம், நட்டாத்தி)
  • கோவில்பட்டி - வெள்ளப்நேரி (வழி: நாலாட்டின்புதூர், வானரமுட்டி, கட்டாலங்குளம், செட்டிக்குறிச்சி, கோனார்கோட்டை)
  • கோவில்பட்டி - கீழஈரால் (வழி: திட்டகுளம், கொடுக்கம்பாறை, கசவன்குன்று, செமபுதூர், டி.சண்முகபுரம், வாலம்பட்டி)
  • கோவில்பட்டி - வேடப்பட்டி (வழி: லிங்கம்பட்டி, கடலையூர், மலைப்பட்டி, தாப்பாத்தி, வடமலாபும், அச்சங்குளம்)
  • கோவில்பட்டி - அகிலாண்டபுரம் (வழி: நாலாட்டின்புதூர், இடைச்செவல், வில்லிச்சேரி, சிவஞானபுரம், சவலாப்பேரி, கரிசல்குளம்)


மக்கள் கருத்து

ஆமாDec 4, 2025 - 06:35:33 PM | Posted IP 162.1*****

தேர்தல் வரப்போகுது அதானே

இந்த பேருந்துகள்Dec 4, 2025 - 12:21:05 PM | Posted IP 104.2*****

எத்தனை நாளைக்கு வழித்தடத்தில் ஓடும்ன்னும் சொல்லீருங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory