» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிருபர் மீது தாக்குதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 4, டிசம்பர் 2025 10:16:09 AM (IST)



தூத்துக்குடியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தூத்துக்குடி  கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனியார் நாளிதழில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், எப்சிஐ குடோன் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார் கூறியுள்ளார். 

இதையடுத்து பாலசுப்பிரமணியன் அந்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரித்தபோது ஊழியர்கள் 5பேர் சேர்ந்து பாலசுப்பிரமணியனை கடுமையாக தாக்கினார்களாம். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் பாலசுப்பிரமணியத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

podhu janamDec 4, 2025 - 05:13:00 PM | Posted IP 172.7*****

thakkiya nabarkal meedhu & satta virodhama iravil kadai thirandhadhadku enna nadavadikkai edukkappattadhu?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory