» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு
புதன் 3, டிசம்பர் 2025 5:36:09 PM (IST)

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கடற்கரை (68), வியாபாரி. இவரும், மனைவி வள்ளியம்மாளும் (50) கோவில்பட்டி, வேலாயுதபுரத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பினர். அவர்கள் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியதில் கடற்கரை, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலையப் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, கன்னியாகுமரி மாவட்டம், மணியன்குவி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ச. அபிலேஷிடம் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









