» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலோர பாதுகாப்பு குழுமத்தில் 51 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதன் 3, டிசம்பர் 2025 3:57:07 PM (IST)

கடலோர பாதுகாப்பு குழுமத்தில் ரோந்து படகுகளை இயக்கும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது தொடர்பாக தூத்துக்குடி கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல் இயக்குனர் சஞ்சய்குமார் அறிவிப்பில் கூறியுள்ளபடி, தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுத்திற்கு கடல் ரோந்து பணிக்காக மொத்தம் 20 படகுகள் (05 டன் படகுகள் 9-ம், 12 டன் படகுகள் 11-ம்) அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட படகுகளை இயக்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில் Indian Coast Guard மற்றும் Indian Navy-யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து விண்ணப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

உதவி ஆய்வாளர் தரத்தில்: 10 நபர்கள் 

தலைமை காவலர் தரத்தில்: 41 நபர்கள் 

மொத்தம்: 51 நபர்கள்

சம்பளம் (அடிப்படை):

உதவி ஆய்வாளர் பதவிக்கு: மாதம் ரூபாய் 36,900/- (இதர படிகளும் சேர்த்து வழங்கப்படும்) 

தலைமை காவலர் தரத்தில்: ரூபாய் 20,600/- (இதர படிகளும் சேர்த்து வழங்கப்படும்) 

தகுதி மற்றும் நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே.

இந்த ஒப்பந்தம் வருடம் ஒரு முறை புதுப்பித்து தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை பயன்படுத்தி படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: கூடுதல் காவல் இயக்குனர், கடலோர பாதுகாப்பு குழுமம், தலைமை, DGP office Campus, Dr. Radhakrishnan Salai, சென்னை-600004.

கடைசி தேதி: 17.12.2025-ந் தேதிக்கு முன்னதாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தூத்துக்குடி கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory