» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைக்காலம் முடிந்த பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
புதன் 3, டிசம்பர் 2025 12:58:25 PM (IST)

தூத்துக்குடியில், மழைக்காலம் முடிந்த பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகரத்தில் வடக்கு மண்டலத்தில் 18வது முகாம் நடக்கிறது இதுவரை 838 மனுக்கள் பெறப்பட்டு 835 மணிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்தில் மழை நீர்கள் 50% தேங்கி நிற்கிறது. இதை அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள வாடுகளில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் செல்லும் வழியில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7, 8வது வார்டுகள் கடற்கரை ஒட்டி இருப்பதால் அப்பகுதியில் தண்ணீர் விரைவாக அகற்ற முடியவில்லை.
காலி மனைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை அதன் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும். சாலைகளில் திரியும் மாடுகள் கோசலையில் அடைக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மாடுகளை சாலையில் திரியவிட்டால் மாடுகள் வளர்க்கும் உரிமம் ரத்து செய்யப்படும். ஜனவரி 10 ஆம் தேதி வரை மழைக்காலம் இருப்பதால் அதன் பின் மழையால் சேதமடைந்த ரோடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், துணை ஆணையர் சரவணகுமார், சுகாதார அலுவலர் சரோஜா சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மண்டல தலைவர் நிர்மல் ராஜ், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)










ஜார்ஜ் ரோடு ஏரியா காரன்Dec 3, 2025 - 06:07:32 PM | Posted IP 172.7*****